புதுச்சேரி

ரங்கசாமி தலைமையில் இருசக்கர வாகன பேரணி

ரங்கசாமி தலைமையில் இருசக்கர வாகன பேரணி

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலையொட்டி, முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் இன்று இருசக்கர வாகன தேர்தல் பிரச்சார பேரணி நடைபெற்றது. மதியம் 2 மணியளவில் திலகர் நகர் நவசக்தி மாரியம்மன் கோவில் எதிரில் இருந்து பேரணி தொடங்கியது.

இருசக்கர வாகனங்களில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்று தொகுதி முழுவதும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். திலகர் நகர், ஸ்டேட் பேங்க் காலனி, மோகன் நகர், நவசக்தி நகர், குண்டுபாளையம், கவுண்டர்பாளையம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பகுதிகள் வழியாக பேரணி சென்றது.

மேலும் விவிபி நகர், பேட்டையன்சத்திரம், சுப்பையா நகர், அனந்தபுரம், வன்னியர் வீதி, தாகூர் நகர், ராஜாஜி நகர், அவ்வை நகர், புதுப்பேட்டை, கொட்டுப்பாளையம், லட்சுமி நகர், வெங்கடேஸ்வரா நகர், வினோபா நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் பிரச்சாரம் நடைபெற்றது.

பேரணி இறுதியாக பொய்யாகுளம் பகுதியில் நிறைவடைந்தது. வழிநெடுகிலும் பொதுமக்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் கூட்டணி நிர்வாகிகள், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் அசோக் ஆனந்துக்கு ‘ஜக்கு’ சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிக்கட்டத்தில் நடைபெற்ற இந்த இருசக்கர வாகன பேரணியில் கூட்டணி கட்சியினர் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.

கருத்துகள் (0)

முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.

தொடர்புடைய செய்திகள்

25 ஆயிரம் வாக்காளர்களை சந்தித்த அசோக் ஆனந்த்

25 ஆயிரம் வாக்காளர்களை சந்தித்த அசோக் ஆனந்த்

தட்டாஞ்சாவடி தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த், இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களை நேரில் சந்தித்தார். வீடு வீடாக சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து, ஜக்கு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அவர் ஆதரவு கோரினார்.

தொகுதி வளர்ச்சிக்கு ஜக்குவுக்கு வாக்களியுங்கள்

தொகுதி வளர்ச்சிக்கு ஜக்குவுக்கு வாக்களியுங்கள்

தட்டாஞ்சாவடி தொகுதியில் அசோக் ஆனந்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். தொகுதி வளர்ச்சிக்கு அசோக் ஆனந்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பொதுமக்களிடம் அவர் வலியுறுத்தினார்.

மக்கள் அன்புடன் வரவேற்பு; வெற்றி உறுதி

மக்கள் அன்புடன் வரவேற்பு; வெற்றி உறுதி

உடையார் நகர் மற்றும் வன்னியர் தெருவில் அசோக் ஆனந்த் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து ஆதரவு கோரினார்.

மணிபாலன் பிறந்தநாள் விழாவில் அன்னதானம்

மணிபாலன் பிறந்தநாள் விழாவில் அன்னதானம்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதலியார்பேட்டை தொகுதி தலைவர் மணிபாலன் பிறந்த நாளையொட்டி பல்வேறு இடங்களில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.