புதுச்சேரி

மக்கள் அன்புடன் வரவேற்பு; வெற்றி உறுதி

மக்கள் அன்புடன் வரவேற்பு; வெற்றி உறுதி

தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உட்பட்ட உடையார் நகர் மற்றும் வன்னியர் தெரு பகுதிகளில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்பகுதிகளில் வீடு வீடாகச் சென்ற அவர், பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகள், தேவைகள் மற்றும் தொகுதி மேம்பாடு தொடர்பான கோரிக்கைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, தொகுதி வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து மக்களிடம் எடுத்துரைத்தார்.

பிரசாரத்தின்போது பொதுமக்கள் அசோக் ஆனந்தை அன்புடன் வரவேற்று தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதுகுறித்து பேசிய அவர், மக்களை நேரில் சந்தித்து பேசுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், மக்கள் அன்புடன் வரவேற்று வெற்றி பெறச் செய்வோம் என உறுதி தெரிவித்திருப்பது தமக்கு நம்பிக்கையை அளிப்பதாகவும் கூறினார்.

மேலும், தேர்தலில் ஜக்கு சின்னத்திற்கு வாக்களித்து ஆதரவு அளிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். பிரசாரத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் (0)

முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.

தொடர்புடைய செய்திகள்

ரங்கசாமி தலைமையில் இருசக்கர வாகன பேரணி

ரங்கசாமி தலைமையில் இருசக்கர வாகன பேரணி

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் இருசக்கர வாகன தேர்தல் பிரச்சார பேரணி நடைபெற்றது.

25 ஆயிரம் வாக்காளர்களை சந்தித்த அசோக் ஆனந்த்

25 ஆயிரம் வாக்காளர்களை சந்தித்த அசோக் ஆனந்த்

தட்டாஞ்சாவடி தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த், இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களை நேரில் சந்தித்தார். வீடு வீடாக சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து, ஜக்கு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அவர் ஆதரவு கோரினார்.

தொகுதி வளர்ச்சிக்கு ஜக்குவுக்கு வாக்களியுங்கள்

தொகுதி வளர்ச்சிக்கு ஜக்குவுக்கு வாக்களியுங்கள்

தட்டாஞ்சாவடி தொகுதியில் அசோக் ஆனந்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். தொகுதி வளர்ச்சிக்கு அசோக் ஆனந்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பொதுமக்களிடம் அவர் வலியுறுத்தினார்.

மணிபாலன் பிறந்தநாள் விழாவில் அன்னதானம்

மணிபாலன் பிறந்தநாள் விழாவில் அன்னதானம்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதலியார்பேட்டை தொகுதி தலைவர் மணிபாலன் பிறந்த நாளையொட்டி பல்வேறு இடங்களில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.