புதுச்சேரி

25 ஆயிரம் வாக்காளர்களை சந்தித்த அசோக் ஆனந்த்

25 ஆயிரம் வாக்காளர்களை சந்தித்த அசோக் ஆனந்த்

தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் தொடர்ந்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களை நேரில் சந்தித்து அவர் வாக்கு சேகரித்துள்ளார்.

வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்த அசோக் ஆனந்த், அவர்களின் குறைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்தார். தொகுதியின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் தொடர்ந்து பாடுபடுவதாக அவர் உறுதியளித்தார்.

பிரச்சாரத்தின்போது பொதுமக்கள் மலர் தூவி, ஆரத்தி எடுத்தும், பொன்னாடை அணிவித்தும் அசோக் ஆனந்தை வரவேற்றனர். பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் அவர் ஆதரவு கோரினார்.

தொகுதி மக்களின் ஆதரவுடன் தொடர்ந்து மக்கள் பணியாற்ற வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்ட அசோக் ஆனந்த், ஜக்கு சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு பொதுமக்களிடம் வலியுறுத்தினார்.

கருத்துகள் (0)

முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.

தொடர்புடைய செய்திகள்

ரங்கசாமி தலைமையில் இருசக்கர வாகன பேரணி

ரங்கசாமி தலைமையில் இருசக்கர வாகன பேரணி

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் இருசக்கர வாகன தேர்தல் பிரச்சார பேரணி நடைபெற்றது.

தொகுதி வளர்ச்சிக்கு ஜக்குவுக்கு வாக்களியுங்கள்

தொகுதி வளர்ச்சிக்கு ஜக்குவுக்கு வாக்களியுங்கள்

தட்டாஞ்சாவடி தொகுதியில் அசோக் ஆனந்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். தொகுதி வளர்ச்சிக்கு அசோக் ஆனந்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பொதுமக்களிடம் அவர் வலியுறுத்தினார்.

மக்கள் அன்புடன் வரவேற்பு; வெற்றி உறுதி

மக்கள் அன்புடன் வரவேற்பு; வெற்றி உறுதி

உடையார் நகர் மற்றும் வன்னியர் தெருவில் அசோக் ஆனந்த் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து ஆதரவு கோரினார்.

மணிபாலன் பிறந்தநாள் விழாவில் அன்னதானம்

மணிபாலன் பிறந்தநாள் விழாவில் அன்னதானம்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதலியார்பேட்டை தொகுதி தலைவர் மணிபாலன் பிறந்த நாளையொட்டி பல்வேறு இடங்களில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.