புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தை ஆதரித்து முதலமைச்சர் என். ரங்கசாமி வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.
ஈ.சி.ஆர். சாலை அருகே பிரச்சாரத்தை தொடங்கிய அவர், சின்னையன்பேட், வேலன் நகர், வினோபா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து ஆதரவு கோரினார்.
அப்போது பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி தொகுதியை தான் ராஜினாமா செய்ததற்கு அசோக் ஆனந்த் தொகுதியை சிறப்பாக கவனித்துக் கொள்வார் என்ற நம்பிக்கையே முக்கிய காரணம் என தெரிவித்தார்.
அசோக் ஆனந்த் வெற்றி பெற்றால் தொகுதிக்கு தேவையான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார். மேலும், யார் வெற்றி பெற்றால் தொகுதிக்கு சிறந்த ஆட்சியும் வளர்ச்சியும் கிடைக்கும் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்ட ரங்கசாமி, ஜக்கு சின்னத்திற்கு வாக்களித்து அசோக் ஆனந்தை வெற்றி பெறச் செய்யுமாறு பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்தார்.
கருத்துகள் (0)
முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.