காந்தி ஜெயந்தியையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
காந்தி ஜெயந்தியையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், மகாத்மா காந்தியின் கொள்கைகள் சிறந்த சமூகத்தையும் வளர்ச்சியடைந்த இந்தியாவையும் நோக்கி தொடர்ந்து வழிநடத்தட்டும் என குறிப்பிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்ட பதிவில், தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 157வது பிறந்தநாளில், அனைத்து குடிமக்கள் சார்பிலும் அவருக்கு மரியாதைக்குரிய அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.
கருத்துகள் (0)
முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.