தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உட்பட்ட குண்டுபாளையம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அசோக் ஆனந்தனை, அப்பகுதி குழந்தைகள் சிகப்பு கம்பளம் விரித்து ரோஜாப்பூக்களுடன் உற்சாகமாக வரவேற்றனர். “ஹார்ட்டி வெல்கம்” எனக் கூறி வரவேற்ற குழந்தைகளுடன் அசோக் ஆனந்த் அன்புடன் கலந்துரையாடினார்.
இதனைத் தொடர்ந்து குண்டுபாளையம் பகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சந்தித்த அவர், தொகுதியின் வளர்ச்சி மற்றும் மக்களின் தேவைகளுக்காக பணியாற்றுவதற்கு ஜக்கு சின்னத்திற்கு வாக்களித்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
பிரசாரத்தின் போது குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் அளித்த வரவேற்பு அப்பகுதியில் கவனத்தை ஈர்த்தது.
கருத்துகள் (0)
முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.