புதுச்சேரி

சபாநாயகர் மரபை மறந்து வாக்கு சேகரிப்பா?

சபாநாயகர் மரபை மறந்து வாக்கு சேகரிப்பா?

தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ராஜ்பவன் தொகுதி சார்பில் மாவட்டத் தலைவர் வேல்முருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, முன்னாள் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் வைத்தியநாதன், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜினாமா செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய அனந்தராமன், புதுச்சேரியில் தேர்தல் துறையில் முறைகேடுகள் மூலம் ஆளும் கட்சி வெற்றி பெற்றதாகவும், தற்போது நடைபெறும் இடைத்தேர்தலிலும் அதிகாரத்தை பயன்படுத்தி ஆளும் தரப்பினர் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும், தற்காலிக சபாநாயகர் முதலமைச்சரின் குரலாக செயல்படுவதாகவும், சபாநாயகர் பதவிக்கான மரபை மறந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதாகவும் அவர் விமர்சித்தார். சட்டத்தில் விதிமுறை உள்ளதா என்பதை விட, சபாநாயகர் பதவிக்குரிய மரபை மீறக்கூடாது என்பதே தங்களது நிலைப்பாடு என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து, எவ்வளவு வாக்கு சேகரித்தாலும் அவருக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படாது என அனந்தராமன் பேசியது ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துகள் (0)

முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.

தொடர்புடைய செய்திகள்

ரங்கசாமி தலைமையில் இருசக்கர வாகன பேரணி

ரங்கசாமி தலைமையில் இருசக்கர வாகன பேரணி

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் இருசக்கர வாகன தேர்தல் பிரச்சார பேரணி நடைபெற்றது.

25 ஆயிரம் வாக்காளர்களை சந்தித்த அசோக் ஆனந்த்

25 ஆயிரம் வாக்காளர்களை சந்தித்த அசோக் ஆனந்த்

தட்டாஞ்சாவடி தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த், இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களை நேரில் சந்தித்தார். வீடு வீடாக சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து, ஜக்கு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அவர் ஆதரவு கோரினார்.

தொகுதி வளர்ச்சிக்கு ஜக்குவுக்கு வாக்களியுங்கள்

தொகுதி வளர்ச்சிக்கு ஜக்குவுக்கு வாக்களியுங்கள்

தட்டாஞ்சாவடி தொகுதியில் அசோக் ஆனந்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். தொகுதி வளர்ச்சிக்கு அசோக் ஆனந்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பொதுமக்களிடம் அவர் வலியுறுத்தினார்.

மக்கள் அன்புடன் வரவேற்பு; வெற்றி உறுதி

மக்கள் அன்புடன் வரவேற்பு; வெற்றி உறுதி

உடையார் நகர் மற்றும் வன்னியர் தெருவில் அசோக் ஆனந்த் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து ஆதரவு கோரினார்.