தொழில்நுட்பம்

இந்தியாவில் ஐபோன் 18 விலை ஏன் அதிகம்?

இந்தியாவில் ஐபோன் 18 விலை ஏன் அதிகம்?

ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ஐபோன் 18 சீரிஸ் மாடல்களில் ஐபோன் 18 புரோ, ஐபோன் 18 புரோ மேக்ஸ் மற்றும் மடிக்கக்கூடிய ஐபோன் டுயோ ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்தியாவில் ஐபோன் டுயோவின் விலை ரூ.2.99 லட்சமாகவும், ஐபோன் 18 புரோ ரூ.1.65 லட்சமாகவும், ஐபோன் 18 புரோ மேக்ஸ் ரூ.1.79 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே மாடல்கள் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இந்தியாவை விட குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்தியாவில் ஐபோன் டுயோவின் விலை அதிகமாக இருப்பதற்கு, அந்த சாதனம் முழுமையாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதனுடன், கடந்த ஓராண்டில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 7 சதவீதம் சரிந்ததும் ஐபோன் 18 புரோ மற்றும் புரோ மேக்ஸ் விலை உயர்வுக்கு காரணமாகியுள்ளது.

மேலும், ஐபோன் உதிரிபாகங்களுக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரிகளும் இந்தியாவில் விலை அதிகரிக்க காரணமாக உள்ளன. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய விலை உயர்வாக உள்ளது.

புதிய ஐபோன் மாடல்களுக்கு மட்டுமின்றி, ஏற்கனவே விற்பனையில் உள்ள பழைய மாடல்களின் விலையையும் ஆப்பிள் நிறுவனம் உயர்த்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுக்கான சிப் தேவை உலக அளவில் அதிகரித்துள்ளதால், சிப்களின் விலையும் உயர்ந்துள்ளது. அதன் தாக்கம் பழைய ஐபோன் மாடல்களின் விலையிலும் எதிரொலித்துள்ளதாக துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் (0)

முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.

தொடர்புடைய செய்திகள்

28 நாட்கள் ரீசார்ஜ் இனி 30 நாட்களாகும்

28 நாட்கள் ரீசார்ஜ் இனி 30 நாட்களாகும்

ப்ரீபெய்டு மொபைல் பயனர்களின் நலனுக்காக புதிய தொலைத்தொடர்பு நுகர்வோர் பாதுகாப்பு விதிமுறைகளை டிராய் வெளியிட்டுள்ளது. இதன்படி 30 நாட்கள் அல்லது அதற்கும் குறைவான காலாவதி கொண்ட ரீசார்ஜ் பேக்குகள் உள்ளிட்ட புதிய வசதிகள் அறிமுகமாக உள்ளன.

80ஸ் AI போட்டோ டிரெண்ட்: பின்னணியில் தண்ணீர் அதிர்ச்சி

80ஸ் AI போட்டோ டிரெண்ட்: பின்னணியில் தண்ணீர் அதிர்ச்சி

AI புகைப்படங்களுக்குப் பின்னால் தண்ணீர் மற்றும் மின்சாரம் பெருமளவில் நுகரப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிளுக்கு போட்டியாக Xiaomi 18 Fold அறிமுகம்

ஆப்பிளுக்கு போட்டியாக Xiaomi 18 Fold அறிமுகம்

ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் அறிமுகமான சில நாட்களிலேயே, ஷியோமி தனது 18 Fold ஸ்மார்ட்போனை சீனச் சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.