மெக்சிகோவின் சால்டிலோ நகரில் நடைபெற்ற ஹூண்டாய் வில்வித்தை உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய வீரர் தீரஜ் பொம்மதேவரா தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
செப்டம்பர் 13-ம் தேதி நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில், ஜப்பானின் நகானிஷி ஜுன்யாவை 6-5 என்ற கணக்கில் தீரஜ் வீழ்த்தினார். ஐந்து செட்களின் முடிவில் இருவரும் 5-5 என சமநிலையில் இருந்ததால், வெற்றியாளரைத் தீர்மானிக்க சூட்-ஆப் நடத்தப்பட்டது. இதில் தீரஜ் 10 புள்ளிகளைப் பெற்று, 9 புள்ளிகள் எடுத்த நகானிஷியை வீழ்த்தி தங்கத்தை உறுதி செய்தார்.
25 வயதான ராணுவ வீரரான தீரஜ், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய ஆண்கள் ரிகர்வ் வில்வித்தை வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்பு 2010-ல் எடின்பர்க் போட்டியில் ஜெயந்தா தாலுக்தார் வெண்கலம் வென்றிருந்தார்.
மேலும், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தங்கம் வென்ற இரண்டாவது இந்திய வில்வித்தை வீரர் என்ற பெருமையும் தீரஜுக்கு கிடைத்துள்ளது. 2007-ல் டோலா பானர்ஜி மகளிர் ரிகர்வ் பிரிவில் தங்கம் வென்றிருந்தார்.
முன்னதாக காலிறுதியில் துருக்கியின் ஒலிம்பிக் பதக்க வீரர் மெட்டே பெர்கிம் துமரை 7-1 என்ற கணக்கிலும், அரையிறுதியில் பிரான்சின் ஒலிம்பிக் வெள்ளிப் பதக்க வீரர் ஜீன்-சார்லஸ் வல்லடோன்டை 7-1 என்ற கணக்கிலும் வீழ்த்தி தீரஜ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
வரலாறு படைத்த தீரஜ் பொம்மதேவரா
கருத்துகள் (0)
முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.