ஜப்பானின் அய்ச்சி–நகோயா நகரில் நடைபெற்று வரும் 20வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
வில்வித்தை மகளிர் பிரிவில் அங்கிதா, அகிர்தி மற்றும் குக்கும் ஆகியோர் அடங்கிய இந்திய அணி இறுதிப்போட்டியில் தென்கொரியாவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது. இதன் மூலம் வில்வித்தை பிரிவில் மட்டும் இந்தியா இதுவரை 4 தங்கப்பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.
வில்வித்தை ரீகர்வ் கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இறுதிப்போட்டியில் தீராஜ் மற்றும் கும்கும் அடங்கிய இந்திய அணியை 5-3 என்ற கணக்கில் வீழ்த்தி சீனா தங்கம் வென்றது.
இதனிடையே மகளிர் குத்துச்சண்டை 75 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா, சீன வீராங்கனையை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.
இதுவரை இந்தியா 12 தங்கம், 24 வெள்ளி, 34 வெண்கலம் என மொத்தம் 70 பதக்கங்களுடன் 6வது இடத்தில் உள்ளது.
ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு தங்க வேட்டை
கருத்துகள் (0)
முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.