நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள **‘டிமாண்டி காலனி 3’** திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
பிரபல இயக்குநர் அஜய் ஞானமுத்துவும், ‘ஒயிட்நைட்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் ஏ. விஜயா சுப்பிரமணியனும் கடந்த 2023ஆம் ஆண்டு திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகம் தொடர்பாக ஒப்பந்தம் செய்திருந்ததாக கூறப்படுகிறது.
அந்த ஒப்பந்தத்தின்படி, ‘டிமாண்டி காலனி 2’ மற்றும் அதன் அடுத்தடுத்த பாகங்களான ‘டிமாண்டி காலனி 3’, ‘டிமாண்டி காலனி 4’ உள்ளிட்ட திரைப்படங்களை இரு தரப்பினரும் பங்குதாரர்களாக உள்ள நிறுவனத்தின் மூலம் தயாரித்து வெளியிட முடிவு செய்யப்பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தன்னுடைய அனுமதி இல்லாமல் ‘டிமாண்டி காலனி 3’ திரைப்படத்தை பேஷன் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் தயாரித்து, அந்த நிறுவனத்தின் பெயரில் தணிக்கைச் சான்றிதழ் பெற்று, ஓடிடி தளத்திற்கு விற்பனை செய்ததாகக் கூறி, ‘ஒயிட்நைட்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் ஏ. விஜயா சுப்பிரமணியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
படத்தின் வெளியீடு மற்றும் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஒப்பந்தத்தில் சமரச தீர்வு மையத்தை அணுகும் நடைமுறை குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதன்படி விவகாரத்திற்கு தீர்வு காணப்படும் வரை திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ்பாபு, **‘டிமாண்டி காலனி 3’ திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை** விதித்து உத்தரவிட்டார்.
மேலும், வழக்கு தொடர்பாக இயக்குநர் அஜய் ஞானமுத்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.
‘டிமாண்டி காலனி 3’ வெளியிட உயர்நீதிமன்றம் தடை
கருத்துகள் (0)
முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.