டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற 2 நாள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு நிர்வாகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது, மக்கள் நலத் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது மற்றும் அமைச்சகங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசின் திட்டங்கள் சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் தடையின்றி சென்றடைய வேண்டும் என வலியுறுத்தினார். நிர்வாகத்தில் எந்த நிலையிலும் தேக்கநிலை ஏற்படுவதை அனுமதிக்கக் கூடாது என்றும் கூறினார்.
அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை மற்றும் அதிவேக செயல்திறன் ஆகிய மூன்றும் முக்கியம் என குறிப்பிட்ட அவர், அமைச்சகங்களின் செயல்பாடுகள் பொதுமக்களுக்கு தெளிவாக தெரியும்படி நவீன டிஜிட்டல் முறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றார்.
மேலும், அமைச்சகங்கள் தனித்தனியாக செயல்படாமல் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், திட்டங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அமைச்சர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தினார்.
வெளிப்படைத்தன்மையை விட்டுக்கொடுக்காதீர்: பிரதமர் மோடி
கருத்துகள் (0)
முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.