செய்திகள்

வெற்றிப்பயணம் திட்டத்தை தொடங்கி வைத்தார் விஜய்

வெற்றிப்பயணம் திட்டத்தை தொடங்கி வைத்தார் விஜய்

சென்னை கோயம்பேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் விஜய், மகளிருக்கான கட்டணமில்லா ‘வெற்றிப்பயணம்’ திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து சென்னை முதல் காஞ்சிபுரம் செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்த அவர், பெண் பயணிகளுக்கு கட்டணமில்லா பயணச்சீட்டுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

புதிய விரிவாக்கத்தின் கீழ் மாநகர மற்றும் நகரப் பகுதிகளில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், LSS, டீலக்ஸ் பேருந்துகள், புறநகர் சாதாரண பேருந்துகள் மற்றும் 40 கி.மீ.க்கு மேல் இயக்கப்படும் மலைப்பகுதி சாதாரண பேருந்துகளும் கொண்டுவரப்படுகின்றன. மொத்தம் 12,692 அரசு பேருந்துகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

அரசு தரவுகளின்படி, தினமும் சுமார் 84.32 லட்சம் மகளிர் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் மகளிருக்கு பொதுப் போக்குவரத்து வசதியை எளிதாக அணுகும் வாய்ப்பு அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.

தொடர்புடைய செய்திகள்

மும்பை தாக்குதலில் யூதக் குழந்தையை காப்பாற்றிய இந்தியப் பெண்

மும்பை தாக்குதலில் யூதக் குழந்தையை காப்பாற்றிய இந்தியப் பெண்

2008 மும்பை பயங்கரவாத தாக்குதலின்போது சாண்ட்ரா என்ற இந்தியப் பெண், பெற்றோரை இழந்த யூதக் குழந்தை மோஷேவை துணிச்சலுடன் மீட்டார்.

டிரம்ப் ஆட்சியில் 2.50 லட்சம் விசாக்கள் ரத்து

டிரம்ப் ஆட்சியில் 2.50 லட்சம் விசாக்கள் ரத்து

டிரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் அமெரிக்கா 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட விசாக்களை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காந்தி ஜெயந்தியில் தலைவர்கள் மரியாதை

காந்தி ஜெயந்தியில் தலைவர்கள் மரியாதை

காந்தி ஜெயந்தியையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இனி மின் கட்டணத்துடன் போக்குவரத்து அபராதமா?

இனி மின் கட்டணத்துடன் போக்குவரத்து அபராதமா?

நாடு முழுவதும் நிலுவையில் உள்ள போக்குவரத்து இ-சலான் அபராதங்களை வசூலிக்க புதிய வழிமுறைகளை பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தியுள்ளது.