செய்திகள்

வீரமணி வழக்கில் அமைச்சர் ராஜ்மோகன் கேள்வி

வீரமணி வழக்கில் அமைச்சர் ராஜ்மோகன் கேள்வி

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் இடையிலான கூட்டணி உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். இரு தரப்பினரும் நல்ல நட்புடன் இருப்பதாகவும், மூத்த தோழர்கள் தங்களுக்கு வழிகாட்டி வருவதாகவும் கூறினார்.

அதேநேரத்தில், வீரமணி வழக்கு தொடர்பாக திமுகவை நோக்கி சில கேள்விகள் இருப்பதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். வீடியோ தெளிவாக இல்லை என முன்னாள் அமைச்சர் ரகுபதி கூறியிருப்பது குறித்து கேள்வி எழுப்பிய அவர், வழக்கை முடித்து வைக்க அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது யார் என்பதை கண்டறிய வேண்டும் என்றார்.

மேலும், அரசியல் மற்றும் அதிகார செல்வாக்கு கொண்டவர்கள் தொடர்புடைய வழக்குகளில் பணப் பரிமாற்றம் நடைபெற்றதா என்பது குறித்தும் விசாரணை நடைபெறுவதாக அவர் கூறினார். தற்போதைய அரசு பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே வழக்கில் பல்வேறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கடந்த ஓராண்டாக திமுக ஆட்சியில் வீரமணிக்கு எதிரான விசாரணை நடைபெறாதது ஏன், விசாரணையை தடுத்தது யார், அமைதியாக இருக்க உத்தரவிட்டது யார் என்பதையும் கண்டறிய வேண்டும் என அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

மேலும், இந்த வழக்கு முதலமைச்சரின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும், இதில் தொடர்புடைய யாரும் தப்பிக்க முடியாது என்றும் ராஜ்மோகன் தெரிவித்தார். ஒவ்வொருவரின் அடிப்படை உரிமைகளையும் மீட்டெடுப்பது அவசியம் என்றும் அவர் கூறினார்.

கருத்துகள் (0)

முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.

தொடர்புடைய செய்திகள்

மும்பை தாக்குதலில் யூதக் குழந்தையை காப்பாற்றிய இந்தியப் பெண்

மும்பை தாக்குதலில் யூதக் குழந்தையை காப்பாற்றிய இந்தியப் பெண்

2008 மும்பை பயங்கரவாத தாக்குதலின்போது சாண்ட்ரா என்ற இந்தியப் பெண், பெற்றோரை இழந்த யூதக் குழந்தை மோஷேவை துணிச்சலுடன் மீட்டார்.

டிரம்ப் ஆட்சியில் 2.50 லட்சம் விசாக்கள் ரத்து

டிரம்ப் ஆட்சியில் 2.50 லட்சம் விசாக்கள் ரத்து

டிரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் அமெரிக்கா 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட விசாக்களை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காந்தி ஜெயந்தியில் தலைவர்கள் மரியாதை

காந்தி ஜெயந்தியில் தலைவர்கள் மரியாதை

காந்தி ஜெயந்தியையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

வெற்றிப்பயணம் திட்டத்தை தொடங்கி வைத்தார் விஜய்

வெற்றிப்பயணம் திட்டத்தை தொடங்கி வைத்தார் விஜய்

சென்னை கோயம்பேட்டில் மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய முதல்வர் விஜய், ‘வெற்றிப்பயணம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார்.