செய்திகள்

விநாயகர் சதுர்த்தியால் ஆம்னி பஸ் கட்டணம் உயர்வு

விநாயகர் சதுர்த்தியால் ஆம்னி பஸ் கட்டணம் உயர்வு

விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் திடீரென அதிகரித்துள்ளது.

திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால் ஆம்னி பேருந்துகளுக்கான முன்பதிவும் அதிகரித்துள்ளது.

பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் வழக்கத்தை விட பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, சென்னையில் இருந்து மதுரை செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் சாதாரண நாட்களில் ரூ.700 முதல் ரூ.1,800 வரை இருக்கும் நிலையில், தற்போது பயணக் கட்டணம் ரூ.5,000 வரை உயர்ந்துள்ளது.

தொடர் விடுமுறை காலத்தில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு இந்த கட்டண உயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.

தொடர்புடைய செய்திகள்

மும்பை தாக்குதலில் யூதக் குழந்தையை காப்பாற்றிய இந்தியப் பெண்

மும்பை தாக்குதலில் யூதக் குழந்தையை காப்பாற்றிய இந்தியப் பெண்

2008 மும்பை பயங்கரவாத தாக்குதலின்போது சாண்ட்ரா என்ற இந்தியப் பெண், பெற்றோரை இழந்த யூதக் குழந்தை மோஷேவை துணிச்சலுடன் மீட்டார்.

டிரம்ப் ஆட்சியில் 2.50 லட்சம் விசாக்கள் ரத்து

டிரம்ப் ஆட்சியில் 2.50 லட்சம் விசாக்கள் ரத்து

டிரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் அமெரிக்கா 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட விசாக்களை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காந்தி ஜெயந்தியில் தலைவர்கள் மரியாதை

காந்தி ஜெயந்தியில் தலைவர்கள் மரியாதை

காந்தி ஜெயந்தியையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

வெற்றிப்பயணம் திட்டத்தை தொடங்கி வைத்தார் விஜய்

வெற்றிப்பயணம் திட்டத்தை தொடங்கி வைத்தார் விஜய்

சென்னை கோயம்பேட்டில் மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய முதல்வர் விஜய், ‘வெற்றிப்பயணம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார்.