செய்திகள்

விடுதி உணவில் மாட்டிறைச்சி: அமைச்சர் ஆலோசனை

விடுதி உணவில் மாட்டிறைச்சி: அமைச்சர் ஆலோசனை

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா சமூக நீதி மாணவர் விடுதியில் அமைச்சர் வன்னி அரசு திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், தற்போதைய மெனு மற்றும் அதில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து அவர் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், சமூக நீதி விடுதிகளில் தற்போது சிக்கன், மட்டன் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். சில மாணவர்கள் உணவுப் பட்டியலில் மாட்டிறைச்சியையும் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறினார்.

கிராமப்புறங்களில் இருந்து வரும் சில மாணவர்கள் தங்களது வீடுகளில் மட்டன் அதிகமாக சாப்பிட்டதில்லை என்றும், தங்களுக்கு மாட்டிறைச்சி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அதே நேரத்தில், சில மாணவர்கள் மாட்டிறைச்சி வேண்டாம் என கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனால், மாணவர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தி, உணவுப் பட்டியலில் மாட்டிறைச்சியை சேர்ப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் மாட்டிறைச்சி பொதுவான உணவு இல்லை என்றும், அது தமிழக கலாசாரத்தில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட நபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் உணவுப் பழக்கமாக மட்டுமே இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், அமைச்சர் வன்னி அரசு தவறான முடிவை எடுக்கமாட்டார் என நம்புவதாகவும், ஒருவேளை அதை அமல்படுத்த நடவடிக்கை எடுத்தால் கடும் எதிர்ப்பு ஏற்படும் என்றும் கிருஷ்ணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் (0)

முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.

தொடர்புடைய செய்திகள்

மும்பை தாக்குதலில் யூதக் குழந்தையை காப்பாற்றிய இந்தியப் பெண்

மும்பை தாக்குதலில் யூதக் குழந்தையை காப்பாற்றிய இந்தியப் பெண்

2008 மும்பை பயங்கரவாத தாக்குதலின்போது சாண்ட்ரா என்ற இந்தியப் பெண், பெற்றோரை இழந்த யூதக் குழந்தை மோஷேவை துணிச்சலுடன் மீட்டார்.

டிரம்ப் ஆட்சியில் 2.50 லட்சம் விசாக்கள் ரத்து

டிரம்ப் ஆட்சியில் 2.50 லட்சம் விசாக்கள் ரத்து

டிரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் அமெரிக்கா 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட விசாக்களை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காந்தி ஜெயந்தியில் தலைவர்கள் மரியாதை

காந்தி ஜெயந்தியில் தலைவர்கள் மரியாதை

காந்தி ஜெயந்தியையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

வெற்றிப்பயணம் திட்டத்தை தொடங்கி வைத்தார் விஜய்

வெற்றிப்பயணம் திட்டத்தை தொடங்கி வைத்தார் விஜய்

சென்னை கோயம்பேட்டில் மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய முதல்வர் விஜய், ‘வெற்றிப்பயணம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார்.