தமிழகத்தில் சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரத்தை உருவாக்குவது, தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட நோக்கங்களுடன் முதல்வர் விஜய் நேற்று (செப்.12) பிரிட்டன் சென்றார்.
அங்கு சில்வர்ஸ்டோன் ரேஸிங் சர்கியூட்டில் உள்ள கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, அங்கு நடைபெற்ற ‘மிச்செலின் லே மான்ஸ் கப்’ கார் பந்தயத்தை முதல்வர் விஜய் முறைப்படி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பந்தயம் நிறைவடைந்த பின்னர், பந்தயக் களத்தில் நடிகரும் ரேஸருமான அஜித்குமாருடன் முதல்வர் விஜய் மூவர்ணக் கொடியுடன் இருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. மேலும், ரேஸ் டிராக்கில் முதல்வர் விஜய் ஓடும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.
லண்டனில் நடைபெற்ற இந்த கார் பந்தயத்தில் 44 கார்கள் பங்கேற்றன. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற போட்டியில் அஜித்குமார் பங்கேற்றார்.
இதில் அஜித்குமாரின் அணி 3-வது இடத்தை பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. பந்தயத்தை முதல்வர் விஜய் இந்திய நேரப்படி நேற்று இரவு 9.45 மணியளவில் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
விஜய் – அஜித் இணைந்த தருணம் வைரல்
Thala thalapthy... mass