செய்திகள்

போதைப்பொருள் கடத்தலுக்கு இரக்கமற்ற நடவடிக்கை: அமித்ஷா

போதைப்பொருள் கடத்தலுக்கு இரக்கமற்ற நடவடிக்கை: அமித்ஷா

டெல்லியில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் போதைப்பொருள் தடுப்புப் படை தலைவர்கள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாட்டில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

இந்தியாவுக்குள் ஒரு கிராம் போதைப்பொருள் கூட வருவதையோ, நாட்டிலிருந்து வெளியே செல்வதையோ அனுமதிக்கக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருப்பதாக அவர் கூறினார். மேலும், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட அளவில் தீவிரப்படுத்தப்பட்டு, முழுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமித்ஷா குறிப்பிட்டார். உலகளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள போதைப்பொருட்களுக்கு எதிரான போராட்டம் கடினமானதாக இருந்தாலும், அதனை கைவிட முடியாது என்றும் அவர் கூறினார்.

மேலும், உளவுத் தகவல் சேகரிப்பு, விசாரணை, நிதி சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் வழக்குத் தொடருதல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்த மாநில அளவில் செயல் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமித்ஷா தெரிவித்தார்.

2029 டிசம்பர் 31-க்குள் இந்தியாவில் போதைப்பொருள் புழக்கத்தை வேரறுக்கும் இலக்கை அடைய அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், நிர்ணயிக்கப்பட்ட பணிகளை காலக்கெடுவுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கருத்துகள் (0)

முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.

தொடர்புடைய செய்திகள்

மும்பை தாக்குதலில் யூதக் குழந்தையை காப்பாற்றிய இந்தியப் பெண்

மும்பை தாக்குதலில் யூதக் குழந்தையை காப்பாற்றிய இந்தியப் பெண்

2008 மும்பை பயங்கரவாத தாக்குதலின்போது சாண்ட்ரா என்ற இந்தியப் பெண், பெற்றோரை இழந்த யூதக் குழந்தை மோஷேவை துணிச்சலுடன் மீட்டார்.

டிரம்ப் ஆட்சியில் 2.50 லட்சம் விசாக்கள் ரத்து

டிரம்ப் ஆட்சியில் 2.50 லட்சம் விசாக்கள் ரத்து

டிரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் அமெரிக்கா 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட விசாக்களை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காந்தி ஜெயந்தியில் தலைவர்கள் மரியாதை

காந்தி ஜெயந்தியில் தலைவர்கள் மரியாதை

காந்தி ஜெயந்தியையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

வெற்றிப்பயணம் திட்டத்தை தொடங்கி வைத்தார் விஜய்

வெற்றிப்பயணம் திட்டத்தை தொடங்கி வைத்தார் விஜய்

சென்னை கோயம்பேட்டில் மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய முதல்வர் விஜய், ‘வெற்றிப்பயணம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார்.