சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கும் வகையில், தொழில்நுட்ப அடிப்படையிலான புதிய சுங்கக்கட்டண வசூல் முறையை கொண்டு வர அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, வாகனத்தின் பதிவு எண்ணுடன் பாஸ்டேக்கை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வாகனப் பதிவு எண் மற்றும் பாஸ்டேக் ஆகிய இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு சுங்கக்கட்டணம் வசூலிக்கும் இந்த முறையின் மூலம், ஆண்டுக்கு சுமார் ரூ.10,000 கோடி அரசுக்கு வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்பு சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் 12 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலையும், சில நேரங்களில் 30 நிமிடங்கள் வரை காத்திருக்கும் சூழலும் இருந்தது. பாஸ்டேக் அறிமுகத்துக்குப் பிறகு இந்த காத்திருப்பு நேரம் கணிசமாக குறைந்துள்ளது.
அடுத்தகட்டமாக, வாகனங்களை சுங்கச்சாவடிகளில் நிறுத்த வேண்டிய அவசியமே இல்லாத வகையில் முழுமையான டிஜிட்டல் சுங்கக்கட்டண வசூல் முறையை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பயண நேரம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டை மேலும் குறைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய தடையற்ற சுங்கக்கட்டண வசூல் திட்டத்தின் 60 முதல் 70 சதவீத பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் இந்த முறை அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் தடையற்ற சுங்கக்கட்டணம்
கருத்துகள் (0)
முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.