2029 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ‘மாணவர் குரல்’ என்ற தலைப்பில் மாநிலம் தோறும் பயணம் செய்து கல்லூரி மாணவ, மாணவியரை ராகுல் காந்தி சந்தித்து வருகிறார்.
தமிழகத்திலும் இந்த நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தியின் உதவியாளர் பைஜு மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் நிகழ்ச்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அதன் முடிவில், வரும் அக்டோபர் முதல் வாரத்தில் ராகுல் காந்தியை தமிழகம் அழைத்து வந்து, கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாணவர்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு
கருத்துகள் (0)
முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.