செய்திகள்

தமிழகத்தில் 36 ஆயிரம் விநாயகர் சிலைகளுக்கு அனுமதி

தமிழகத்தில் 36 ஆயிரம் விநாயகர் சிலைகளுக்கு அனுமதி

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தமிழகம் முழுவதும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தவும், பின்னர் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் போலீசாரிடம் அனுமதி கோரியிருந்தனர்.

உயர் நீதிமன்ற உத்தரவு, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தல்கள், தீயணைப்பு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் தடையில்லா சான்றுகள் மற்றும் காவல்துறையின் கட்டுப்பாடுகளை பின்பற்றி, தமிழகம் முழுவதும் சுமார் 36 ஆயிரம் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் நிறுவ போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.

சென்னை காவல் எல்லைக்குள் மட்டும் 1,562 விநாயகர் சிலைகளை நிறுவ அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி 16,500 போலீசார் மற்றும் 500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

சிலைகள் நிறுவப்படும் இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதுடன், தன்னார்வலர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தவும் சிலை அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், காவல்துறை அனுமதித்த வழித்தடங்களில் செப்டம்பர் 19 மற்றும் 20-ம் தேதிகளில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று, குறிப்பிட்ட நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதி பெறாத இடங்களில் சிலைகளை நிறுவக்கூடாது என்றும், விதிமுறைகளை மீறுவோர் மற்றும் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்த முயற்சிப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

கருத்துகள் (0)

முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.

தொடர்புடைய செய்திகள்

மும்பை தாக்குதலில் யூதக் குழந்தையை காப்பாற்றிய இந்தியப் பெண்

மும்பை தாக்குதலில் யூதக் குழந்தையை காப்பாற்றிய இந்தியப் பெண்

2008 மும்பை பயங்கரவாத தாக்குதலின்போது சாண்ட்ரா என்ற இந்தியப் பெண், பெற்றோரை இழந்த யூதக் குழந்தை மோஷேவை துணிச்சலுடன் மீட்டார்.

டிரம்ப் ஆட்சியில் 2.50 லட்சம் விசாக்கள் ரத்து

டிரம்ப் ஆட்சியில் 2.50 லட்சம் விசாக்கள் ரத்து

டிரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் அமெரிக்கா 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட விசாக்களை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காந்தி ஜெயந்தியில் தலைவர்கள் மரியாதை

காந்தி ஜெயந்தியில் தலைவர்கள் மரியாதை

காந்தி ஜெயந்தியையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

வெற்றிப்பயணம் திட்டத்தை தொடங்கி வைத்தார் விஜய்

வெற்றிப்பயணம் திட்டத்தை தொடங்கி வைத்தார் விஜய்

சென்னை கோயம்பேட்டில் மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய முதல்வர் விஜய், ‘வெற்றிப்பயணம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார்.