மூத்த நடிகர் சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துகளைப் பரப்பியதாகக் கூறப்படும் நபர்கள் மீது சென்னை தேனாம்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த 1-ம் தேதி முகநூலில் வெளியான வீடியோ ஒன்றில், நடிகர் சிவகுமார், அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி மற்றும் மருமகள் ஜோதிகா ஆகியோரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஆதாரமற்ற கருத்துகள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், நடிகை ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட சில திரைப் பிரபலங்கள் குறித்தும் இழிவான கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிவகுமார் குடும்பத்தினர் அகரம் அறக்கட்டளை மற்றும் விதை திட்டம் உள்ளிட்டவற்றின் மூலம் கல்வி சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், அவர்களின் நற்பெயர் மற்றும் கண்ணியத்தை பாதிக்கும் வகையில் அவதூறு தகவல்களை பரப்பியவர்கள் மீது உரிய மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாசர் தனது புகாரில் வலியுறுத்தியுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை போலீசார் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகுமார் குடும்பம் குறித்து அவதூறு: வழக்குப்பதிவு
கருத்துகள் (0)
முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.