பிரபல பட்டிமன்றப் பேச்சாளரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா மறைவுக்கு, கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சாலமன் பாப்பையாவின் மறைவு தமது மனதை உடைத்துவிட்டதாக வைரமுத்து குறிப்பிட்டுள்ளார். மேலும், மகாகவி பாரதி மறைந்த அதே நாளில் சாலமன் பாப்பையாவும் மறைந்திருப்பதை சுட்டிக்காட்டிய அவர், செப்டம்பர் 11-ம் தேதி தமிழுக்கு நல்ல நாளாக அமையவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.
பட்டிமன்றத் தமிழ் முடிந்துவிட்டதா? பாமரத் தமிழ் தனது மூச்சை நிறுத்திக்கொண்டதா? என கேள்வி எழுப்பியுள்ள வைரமுத்து, கல்லூரிகளில் கற்றுக்கொடுக்கப்பட்ட தமிழை சாதாரண மக்களிடம் கொண்டு சேர்த்ததில் சாலமன் பாப்பையாவுக்கு முக்கிய பங்கு இருந்ததாக புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும், தான் எழுதிய ‘இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்’ என்ற நூலில் சாலமன் பாப்பையா குறித்து பதிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிரிக்க வைத்ததுடன் சிந்திக்கவும் தூண்டிய மேடை கலைஞராக விளங்கிய சாலமன் பாப்பையா மறைந்துவிட்டது தமிழ் உலகிற்கு பேரிழப்பு என்றும் வைரமுத்து தனது இரங்கல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சாலமன் பாப்பையா மறைவு: வைரமுத்து இரங்கல்
கருத்துகள் (0)
முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.