செய்திகள்

காமராஜர் காலை உணவு சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டது

காமராஜர் காலை உணவு சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டது

கடலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ள பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்துக்குத் தேவையான அடிப்படைப் பொருட்களை பள்ளி நிர்வாகமே சொந்த நிதியில் வாங்க வேண்டும் என வெளியான சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியது.

காலை உணவுத் திட்டத்திற்கான பெயர்ப்பலகைகள், தட்டுகள், டம்ளர்கள் உள்ளிட்ட தேவையான பொருட்களுக்கான செலவை தலைமை ஆசிரியர்கள் ஏற்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஆசிரியர்கள் மீது தேவையற்ற பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது என விமர்சித்திருந்தார். மேலும், சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப் பெறுவதுடன், திட்டத்துக்குத் தேவையான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், வரும் 17-ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தில் வெளியான சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும், சுற்றறிக்கை வெளியான விவகாரத்தில் கவனக்குறைவாகச் செயல்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.

தொடர்புடைய செய்திகள்

மும்பை தாக்குதலில் யூதக் குழந்தையை காப்பாற்றிய இந்தியப் பெண்

மும்பை தாக்குதலில் யூதக் குழந்தையை காப்பாற்றிய இந்தியப் பெண்

2008 மும்பை பயங்கரவாத தாக்குதலின்போது சாண்ட்ரா என்ற இந்தியப் பெண், பெற்றோரை இழந்த யூதக் குழந்தை மோஷேவை துணிச்சலுடன் மீட்டார்.

டிரம்ப் ஆட்சியில் 2.50 லட்சம் விசாக்கள் ரத்து

டிரம்ப் ஆட்சியில் 2.50 லட்சம் விசாக்கள் ரத்து

டிரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் அமெரிக்கா 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட விசாக்களை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காந்தி ஜெயந்தியில் தலைவர்கள் மரியாதை

காந்தி ஜெயந்தியில் தலைவர்கள் மரியாதை

காந்தி ஜெயந்தியையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

வெற்றிப்பயணம் திட்டத்தை தொடங்கி வைத்தார் விஜய்

வெற்றிப்பயணம் திட்டத்தை தொடங்கி வைத்தார் விஜய்

சென்னை கோயம்பேட்டில் மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய முதல்வர் விஜய், ‘வெற்றிப்பயணம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார்.