ரஷ்யா–உக்ரைன் இடையிலான போர் நீண்ட காலமாக தொடர்ந்து வரும் நிலையில், அதை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சர்வதேச முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தப் போரில் ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சி மேற்கொண்டிருந்தார்.
இந்த சூழலில், டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் அமைப்பு மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். மாநாட்டின் போது பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோருடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.
இதனிடையே, மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், டெல்லியில் நடைபெற்ற இருதரப்பு சந்திப்புகளின்போது உக்ரைன் விவகாரத்தில் நல்ல தீர்வு ஏற்படுவதற்கு உதவ தயாராக இருப்பதாக பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் தெரிவித்ததாக கூறினார்.
மேலும், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் இரு தலைவர்களும் உதவ முன்வந்ததற்கு ரஷ்ய அதிபர் புடின் வரவேற்பு தெரிவித்ததாகவும் பெஸ்கோவ் குறிப்பிட்டார்.
இதனால், உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா மற்றும் சீனாவின் பங்களிப்பு தொடர்பான எதிர்பார்ப்பு சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது.
உக்ரைன் போர்: உதவ தயார் மோடி, ஜின்பிங்
கருத்துகள் (0)
முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.