அமெரிக்க அதிபர் டிரம்ப், அயர்லாந்துக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். டப்ளினில் அயர்லாந்து அதிபர் கேத்தரின் கான்னொலி மற்றும் பிரதமரை சந்தித்துப் பேசிய அவர், பின்னர் கவுண்டி கிளேரில் நடைபெற்ற ‘ஐரிஷ் ஓபன்’ கோல்ப் போட்டியை பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், அயர்லாந்தும் வட அயர்லாந்தும் இணைந்து ஒரே நாடாக மாறுவதை தான் விரும்புவதாக தெரிவித்தார். அது அற்புதமானதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கனடா அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புவதாகவும், ஆனால் அதற்கான தயார்நிலையில் தற்போது அந்நாடு இருப்பதாகத் தெரியவில்லை என்றும் டிரம்ப் கூறினார்.
மேலும், அமெரிக்க இடைக்காலத் தேர்தல்கள் முடிந்த உடனேயே ஈரான் போர் முடிவுக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் போர் முடிவடைந்த பிறகு கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக வீழ்ச்சியடையும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.
ஒரு வாரத்திற்குள் ஈரான் போர் முடிவுக்கு வருவது குறித்து டிரம்ப் இரண்டாவது முறையாக கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் போர் முடிந்ததும் எண்ணெய் விலை வீழ்ச்சி
கருத்துகள் (0)
முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.