தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி என அக்கட்சியின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மக்கள் விஜய்க்கு ஆதரவளித்து வருவதாக குறிப்பிட்டார். விஜய் இருக்கும் வரை அவர்தான் நிரந்தர முதல்வர் என்றும், தவெக ஆட்சிக்கு நாட்கள் எண்ணப்படவில்லை; திமுகவுக்குத்தான் நாட்கள் எண்ணப்படுகின்றன என்றும் அவர் விமர்சித்தார்.
மேலும், வரவிருக்கும் இடைத்தேர்தலில் தவெக 100 சதவீத வெற்றியை பெறும் என செங்கோட்டையன் உறுதிபடத் தெரிவித்தார். கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார்.
தேர்தலில் கட்சியின் சின்னம் முக்கியத்துவம் பெற்றாலும், வெற்றியை சின்னம் மட்டுமே தீர்மானிக்காது என்றும் செங்கோட்டையன் குறிப்பிட்டார். கடந்த காலத்தில் தான் பல முறை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டதாகவும், தற்போது தவெக சார்பில் விசில் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக ஏற்படும் மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு காண மின் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் மின்தடை பிரச்னை சரிசெய்யப்படும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இடைத்தேர்தலில் தவெக 100% வெற்றி: செங்கோட்டையன்
கருத்துகள் (0)
முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.