அரசியல்

இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி: கம்யூனிஸ்ட் கட்சிகள்

இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி: கம்யூனிஸ்ட் கட்சிகள்

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை அறிவித்துள்ளன.

கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ.,க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதையடுத்து இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக மற்றும் தவெக சார்பில் ஏற்கனவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளன.

இதன்படி, தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரையும், மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரையும் நிறுத்த உள்ளது.

இதற்கான வேட்பாளர்களின் பெயர்கள் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி அறிவிக்கப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

த.வெ.க. அரசுக்கு வெளியில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்து வரும் நிலையில், இடைத்தேர்தலில் அதே கட்சிகளுக்கு எதிராக தனித்துப் போட்டியிடும் முடிவு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

கருத்துகள் (0)

முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.

தொடர்புடைய செய்திகள்

“கனவில் கூட நடக்காது” – இபிஎஸ் காட்டம்

“கனவில் கூட நடக்காது” – இபிஎஸ் காட்டம்

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய்யின் கருத்துகளுக்கு பதிலளித்தார்.

தமிழகத்தில் மாணவர்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு

தமிழகத்தில் மாணவர்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு

2029 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், ‘மாணவர் குரல்’ நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களை ராகுல் காந்தி சந்தித்து வருகிறார்.

வீரமணி வழக்கில் சிறப்பு விசாரணைக்கு அண்ணாமலை கோரிக்கை

வீரமணி வழக்கில் சிறப்பு விசாரணைக்கு அண்ணாமலை கோரிக்கை

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கில் காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணை குறித்து அண்ணாமலை விமர்சனம் தெரிவித்துள்ளார்.

லண்டனை விட இந்திய பொருளாதாரம் பெரியது

லண்டனை விட இந்திய பொருளாதாரம் பெரியது

முதல்வர் விஜய் முதலீடுகளை ஈர்க்க லண்டன் செல்ல வேண்டிய அவசியமில்லை என அண்ணாமலை தெரிவித்தார். உள்ளூர் தொழிலதிபர்களுக்கு ஊக்கமளித்து இந்தியாவிலேயே முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.