அரசியல்

“ஆபாச பேச்சு திமுகவின் டிஎன்ஏ” – அமைச்சர்

“ஆபாச பேச்சு திமுகவின் டிஎன்ஏ” – அமைச்சர்

திமுகவினர் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசுவது அவர்களின் அரசியல் பாணியாக இருப்பதாக அமைச்சர் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த ஆட்சியில் ஏற்பட்ட சீர்கேடுகளின் தாக்கம் தற்போதும் தொடர்வதாகவும், மழை நின்றாலும் தூவானம் விடாதது போல அந்த நிலை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த ஆட்சியில் ஏற்பட்ட பிரச்சினைகளை தற்போதைய அரசு ஒவ்வொன்றாக சரிசெய்து வருவதாகவும், அனைத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், அமைச்சர்கள் மற்றும் முதல்வர்கள் குறித்து திமுகவினர் கீழ்த்தரமாகவும் ஆபாசமாகவும் பேசி வருவதாக விமர்சித்த அமைச்சர், பெண்களுக்கு எதிரான ஆபாசப் பேச்சுகள் தொடர்பாக கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் இரட்டை அர்த்தம் கொண்ட வகையில் ஆபாசமாக பேசி வருவதாக அமைச்சர் ரமேஷ் குற்றம்சாட்டினார்.

வீட்டில் இருந்துகொண்டே அரசியல் செய்ய நினைப்பவர்களுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், தங்கள் ஆட்சியை விமர்சிக்கும் எடப்பாடி பழனிசாமி கடந்த 5 ஆண்டுகளில் என்ன செய்தார் என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

கருத்துகள் (0)

முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.

தொடர்புடைய செய்திகள்

“கனவில் கூட நடக்காது” – இபிஎஸ் காட்டம்

“கனவில் கூட நடக்காது” – இபிஎஸ் காட்டம்

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய்யின் கருத்துகளுக்கு பதிலளித்தார்.

தமிழகத்தில் மாணவர்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு

தமிழகத்தில் மாணவர்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு

2029 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், ‘மாணவர் குரல்’ நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களை ராகுல் காந்தி சந்தித்து வருகிறார்.

வீரமணி வழக்கில் சிறப்பு விசாரணைக்கு அண்ணாமலை கோரிக்கை

வீரமணி வழக்கில் சிறப்பு விசாரணைக்கு அண்ணாமலை கோரிக்கை

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கில் காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணை குறித்து அண்ணாமலை விமர்சனம் தெரிவித்துள்ளார்.

லண்டனை விட இந்திய பொருளாதாரம் பெரியது

லண்டனை விட இந்திய பொருளாதாரம் பெரியது

முதல்வர் விஜய் முதலீடுகளை ஈர்க்க லண்டன் செல்ல வேண்டிய அவசியமில்லை என அண்ணாமலை தெரிவித்தார். உள்ளூர் தொழிலதிபர்களுக்கு ஊக்கமளித்து இந்தியாவிலேயே முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.