இந்தியாவின் சாப்ட்வேர் ஏற்றுமதியில் அமெரிக்கா தொடர்ந்து முக்கிய வாடிக்கையாளர் சந்தையாக இருந்து வருகிறது. மொத்த ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு 54.1 சதவீதமாகவும், அதன் மதிப்பு ரூ.11.37 லட்சம் கோடியாகவும் உள்ளது.
ஐரோப்பிய நாடுகள் 31.8 சதவீத பங்களிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளன. இதில் பிரிட்டன் மட்டும் 15.4 சதவீத பங்கை கொண்டுள்ளது.
இந்தியாவின் மொத்த சாப்ட்வேர் ஏற்றுமதியில் கணினி சேவைகள் 69.3 சதவீத பங்களிப்பை பெற்றுள்ளன. தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி ரூ.13.96 லட்சம் கோடியாகவும், ஐ.டி. சார்பு துறை ஏற்றுமதி ரூ.6.46 லட்சம் கோடியாகவும், பி.பி.ஓ. சேவைகள் ரூ.5.32 லட்சம் கோடியாகவும், பொறியியல் சேவைகள் ரூ.1.14 லட்சம் கோடியாகவும் உயர்ந்துள்ளன.
ஏற்றுமதி பணப்பரிவர்த்தனையில் 72.6 சதவீத பில்கள் அமெரிக்க டாலரில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. யூரோ 9.6 சதவீதமும், இந்திய ரூபாய் 6.3 சதவீதமும் பங்களிக்கின்றன.
வெளிநாட்டு வணிக கிளைகளின் பங்களிப்பையும் சேர்த்துக் கணக்கிடும்போது, இந்தியாவின் மொத்த சாப்ட்வேர் சேவை வர்த்தகம் ரூ.22.73 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்கா முதலிடத்தில் இந்திய சாப்ட்வேர் ஏற்றுமதி
கருத்துகள் (0)
முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.