செய்திகள்

19 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய கொலை குற்றவாளி

19 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய கொலை குற்றவாளி

சென்னை திருவொற்றியூரில், 2007-ம் ஆண்டு யாதவர் சங்க தலைவர் பாண்டியமணி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமினில் வெளியே வந்த அவர், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார்.

இதையடுத்து அவரை பிடிக்க பொன்னேரி நீதிமன்றம் 2010-ம் ஆண்டு பிடிவாரன்ட் பிறப்பித்தது. தீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து அப்துல்லாவை தேடி வந்தனர்.

அப்துல்லா கைது செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் போலீசாரிடம் இருந்த நிலையில், ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் எப்படி தோற்றமளிப்பார் என்பதற்கான படங்களை போலீசார் உருவாக்கினர்.

இந்தப் படங்களை பயன்படுத்தி பல்வேறு பகுதிகளில் விசாரணை மேற்கொண்டதுடன், சமூக வலைதளங்களிலும் தேடுதல் நடத்தினர். இதன் மூலம் அப்துல்லாவுடையதாக சந்தேகிக்கப்பட்ட பேஸ்புக் கணக்கு கண்டறியப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

அவர் அடிக்கடி தனது வசிப்பிடத்தை மாற்றி வந்ததும், திருமணம் செய்து திருமுல்லைவாயல் பகுதியில் வசித்து வந்ததும், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது.

இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு சூளைமேடு அருகே போலீசார் ஷேக் அப்துல்லாவை பிடித்தனர். பின்னர் விசாரணை முடிந்து திருவொற்றியூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட அவரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று புழல் சிறையில் அடைத்தனர்.

19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 39 வயதான ஷேக் அப்துல்லாவை கண்டுபிடித்து கைது செய்ய ஏஐ தொழில்நுட்பம் முக்கிய உதவியாக இருந்துள்ளது.

கருத்துகள் (0)

முதல் கருத்தை பதிவு செய்யுங்கள்.

தொடர்புடைய செய்திகள்

மும்பை தாக்குதலில் யூதக் குழந்தையை காப்பாற்றிய இந்தியப் பெண்

மும்பை தாக்குதலில் யூதக் குழந்தையை காப்பாற்றிய இந்தியப் பெண்

2008 மும்பை பயங்கரவாத தாக்குதலின்போது சாண்ட்ரா என்ற இந்தியப் பெண், பெற்றோரை இழந்த யூதக் குழந்தை மோஷேவை துணிச்சலுடன் மீட்டார்.

டிரம்ப் ஆட்சியில் 2.50 லட்சம் விசாக்கள் ரத்து

டிரம்ப் ஆட்சியில் 2.50 லட்சம் விசாக்கள் ரத்து

டிரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் அமெரிக்கா 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட விசாக்களை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காந்தி ஜெயந்தியில் தலைவர்கள் மரியாதை

காந்தி ஜெயந்தியில் தலைவர்கள் மரியாதை

காந்தி ஜெயந்தியையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

வெற்றிப்பயணம் திட்டத்தை தொடங்கி வைத்தார் விஜய்

வெற்றிப்பயணம் திட்டத்தை தொடங்கி வைத்தார் விஜய்

சென்னை கோயம்பேட்டில் மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய முதல்வர் விஜய், ‘வெற்றிப்பயணம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார்.